ட்ரம்பின் காசா சமாதானத் திட்டத்திற்கு ஐ.நா அங்கீகாரம் – ஹமாஸ் நிராகரிப்பு
காசாவில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய 20 அம்சத் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ட்ரம்ப்பின் சமாதானத் திட்டத்தில் சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையொன்றை ஸ்தாபிக்கும் யோசனையும் உள்ளடங்கியுள்ளது. இதேவேளை, ஐ. நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இது பலஸ்தீனர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் நிலைநாட்டவில்லை […]













