இலங்கை

அநுர அரசின் அடுத்த அதிரடி: எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து!

  • November 18, 2025
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற […]

இலங்கை

நுகேகொடை கூட்டம்: ரவிக்கு கதவடைப்பு?

  • November 18, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் புதிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக ரவி கருணாநாயக்க நாடாளுமன்றம் வந்தார். குறித்த கட்சியின் உரித்து ரவி கருணாநாயக்க வசம் இருப்பதால் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தனதாக்கிக்கொண்டார். இதனால் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் […]

பொழுதுபோக்கு

தனுஷ் உடன் அட்ஜஸ்ட்மெண்ட்… பகீர் கிளப்பிய சீரியல் நடிகை

  • November 18, 2025
  • 0 Comments

தனுஷ் என்னதான் திறமையான நபராக வலம் வந்தாலும், இவரைச் சுற்றி சர்ச்சைகளும் வலம்வருகின்றன. தற்போது பிரபல நடிகை மான்யா ஆனந்த் கொடுத்த பேட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்ரேயாஸ் என்ற பையன் எனக்கு மெசேஜ் செய்து, ஒரு ஸ்டோரி இருக்கு பண்றீங்களா என கேட்டுவிட்டு நீங்கள் ஹீரோவுடன் கமிட்மென்ட் செய்யும்படி இருக்கும் என்று சொன்னார். நான் அதெல்லாம் முடியாது என்று சொன்னேன். உடனே அவர் அந்த ஹீரோ தனுஷாக இருந்தாலும் கமிட்மென்ட் செய்யமாட்டீர்களா என கேட்டார். யாராக இருந்தாலும் […]

இலங்கை

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்குமாறு வலியுறுத்து!

  • November 18, 2025
  • 0 Comments

“அரசியல் உறுதிமொழிகளைவிட தேசிய பாதுகாப்பே மிக முக்கியம். அதனை கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயல்படுமாறு கோருகின்றோம். வடக்கில் […]

இலங்கை

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்போம்!

  • November 18, 2025
  • 0 Comments

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நூட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது. இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை […]

உலகம்

அமெரிக்காவில் வழமைக்குத் திரும்பும் விமான நிலைய சேவைகள்

  • November 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த பல வாரங்களாக அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பலர் பணிகளிலிருந்து விலகியிருந்தனர். இதன் காரணமாக சுமார் 40-ற்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

செவ்வந்தி மூலம் அரசியல் தொடர்பு அம்பலம் – விசாரணை வேட்டை தீவிரம்!

  • November 18, 2025
  • 0 Comments

பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பாதாள குழுவினருக்கு எதிரான […]

உலகம்

டிஜிட்டல் நிதிச் செயல்முறைக்கு புதிய கட்டுப்பாடுகள்! சிங்கப்பூரில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

டிஜிட்டல் நிதி நம்பகத்தன்மைக்கு புதிய விதிமுறைகள் அவசியம் எனத் துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெற்ற நிதித் தொழில்நுட்ப நிகழ்வின் இறுதி நாளில், இது தொடர்பான கோரிக்கையை நிதித் தொழில்நுட்பத் தலைவர்கள் விடுத்துள்ளனர். எதிர்கால டிஜிட்டல் நிதிச் செயல்முறை மீது மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொழில்நுட்பம், பணப்புழக்கத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துவதால், இந்த விதிமுறைகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, […]

கருத்து & பகுப்பாய்வு

தொல்பொருள் திணைக்களமா? சிங்கள தொல்பொருள் திணைக்களமா?

  • November 18, 2025
  • 0 Comments

தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்கு சாதகமாக செயற்படுவதாக தொடர்ச்சியாக தமிழ் மக்களால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 19 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய இரண்டு வருட பதவிக்காலத்திற்கு தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம […]

உலகம் செய்தி

ஷேக் ஹசீனாவை நாடுகடத்த இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளைப் பிரயோகித்து ஒடுக்கிய சமயம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 1600 பேர் வரை உயிரிழந்திருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களைத் […]