மிச்சிகனின் வெய்னில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம், சந்தேக நபர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வெய்னி பகுதியில் கிராஸ் பாயிண்ட் என்ற பெயரிலான கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. விடுமுறை நாளான நேற்று தேவாலயத்திற்கு சிறுவர்கள், பெரியவர்கள் என 150 பேர் வரை வருகை தந்திருந்தனர். அப்போது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதுபற்றி மூத்த பாதிரியார் பாபி கெல்லி ஜூனியர் கூறும்போது, கையில் ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில், பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு […]













