ஐரோப்பா

காசா நகரில் நீடிக்கும் பதற்றம் – சுவிட்சர்லாந்து விடுத்த அழைப்பு

  • September 19, 2025
  • 0 Comments

காசா நகரில் நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரின் மையத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பது ஏற்கனவே தாங்க முடியாத மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இந்த நிலையில் நேற்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதற்றம் அதிகரிப்பது ஒரு தீர்வாகாது எனவும் சுவிட்சர்லாந்து போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், மனிதாபிமான உதவிகளுக்கான தடையற்ற அணுகல், சர்வதேச சட்டத்திற்கு இணங்குதல் மற்றும் இரு-மாநில தீர்வுக்கான […]

ஐரோப்பா

லண்டன் பொதுப் போக்குவரத்து அமைப்பு மீதான சைபர் தாக்குதல் – 02 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

  • September 19, 2025
  • 0 Comments

கடந்த 2024 ஆம் ஆண்டு லண்டன் பொதுப் போக்குவரத்து அமைப்பின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் தல்ஹா ஜுபைர், 19, மற்றும் ஓவன் ஃப்ளவர்ஸ், 18, ஆகியோர் கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார அமைப்புகளில் ஒன்றான கலிபோர்னியாவின் சட்டர் ஹெல்த் தொடர்பான குற்றங்களுக்கும், SSM ஹெல்த் கேர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கண்களுக்குள் ஒரு ஸ்மார்ட்போன் – மெட்டாவின் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம்

  • September 19, 2025
  • 0 Comments

மெட்டா நிறுவனம் தனது கனெக்ட் மாநாட்டில், தொழில்நுட்ப ஆர்வலர்களை வியக்க வைக்கும் வகையில் 3 புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே (Meta Ray-Ban Display), ரே-பான் மெட்டா ஜெனரல் 2, ஓக்லி மெட்டாவான்கார்டு கண்ணாடிகள் வெளியிடப்பட்டுள்ளன. மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே (Meta Ray-Ban Display) இந்த ஸ்மார்ட் கண்ணாடி $799 விலையில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சம், வலது லென்ஸில் உள்ளமைக்கப்பட்ட முழு வண்ண, உயர் தெளிவுத்திறன் கொண்ட ஸ்கிரீன். இது தேவைப்படும்போது மட்டுமே […]

உலகம்

கேள்வியால் கோபமடைந்து ஊடகவியலாளரை திட்டிய டிரம்ப்!

  • September 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய முக்கிய ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோபமடைந்து திட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி இந்த நாட்களில் பிரித்தானியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோதே ​​ஊடகவியலாளரை திட்டியதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி டிரம்பின் செல்வம் மற்றும் வணிக நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட பின்னர், ஊடகவியலாளருடன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் அதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது பிள்ளைகள் தனது தொழிலை நடத்துவார்கள் என்று டிரம்ப் வலியுறுத்தினார். செல்வம் குறித்த கேள்வியால் கோபமடைந்த டிரம்ப்,“நீங்கள் […]

ஐரோப்பா

போரில் கொல்லப்பட்ட 1000 உக்ரைன் வீரர்களின் உடல்களை கையளிக்கும் ரஷ்யா!

  • September 19, 2025
  • 0 Comments

ரஷ்யாவால் கொல்லப்பட்ட 1000 உக்ரைன் போர் வீரர்களின் உடல்கள் அந்நாட்டிடம் கையளிக்கப்படவுள்ளதாக போர்க் கைதிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்புத் தலைமையகம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் பிப்ரவரி 2022 இல் தொடங்கியதிலிருந்து, வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதும் கைதிகளை பரிமாறிக்கொள்வதும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், கியேவ் அல்லது மாஸ்கோ இரண்டுமே தங்கள் சொந்த உயிரிழப்புகள் குறித்த தரவுகளை தொடர்ந்து வெளியிடுவதில்லை […]

ஆசியா

தைவானைக் கைப்பற்றுவோம் – மீண்டும் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சீனா

  • September 19, 2025
  • 0 Comments

தைவானைக் கைப்பற்றப் போவதாக மீண்டும் சீனா எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச இராணுவ அதிகாரிகளிடையே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் டாங் ஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சா்வதசே ஒழுங்கை நிலைநாட்டுவதில் தைவான் விவகாமும் உள்ளடங்கும். அந்தப் பகுதி மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சா்வதேச ஒழுங்கு ஏற்படாது என்றார். தைவானில் பிரிவினைவாத சக்திகள் தலையெடுத்து, சீனாவிடமிருந்து சுதந்திரம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். […]

வட அமெரிக்கா

சீன விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்குவதை கட்டுப்படுத்த கோரிக்கை!

  • September 19, 2025
  • 0 Comments

அமெரிக்க நிர்வாகம் சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது. இதன் மற்றொரு பகுதியாக தற்போது அந்நாட்டின் விமானங்கள் அமெரிக்க விமான நிலையங்களில் தரையிறங்குவதை கட்டுப்படுத்தவோ, அல்லது நிறுத்திவைக்கவோ வேண்டும் என சீனாவிற்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபைக் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அரிய மண் தாதுக்கள் மற்றும் காந்தங்களுக்கான முழுமையான அணுகலை பெய்ஜிங் மீட்டெடுக்காவிட்டால் இந்த நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதி ஜான் மூலெனார்,  […]

ஆசியா

பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் தற்கொலைக்குண்டு தாக்குதல் – 08 பேர் பலி!

  • September 19, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இரண்டு கார்குண்டு வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலூசிஸ்தான் மாகாணத்தின் ஒரு மாவட்டமான டர்பத்தில் முதல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. ஒரு தற்கொலை குண்டுதாரி ஒரு வாகனத்தை பாதுகாப்பு வாகனத் தொடரணி மீது மோதியதில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 23 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் இடம்பெற்று ஒரு சில மணிநேரங்களில் தென்மேற்கு நகரமான சாமனில் மற்றொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் […]

இலங்கை

கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

  • September 19, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். மரணமடைந்த சுரங்க வெல்லாலகே 54 வயதுடையவர். குடும்பத்துடன் நல்லுறவாக வாழ்ந்து வந்த அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தமை அவரது குடும்பத்தாருக்கு மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் வழியாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். சுரங்க வெல்லாலகேயின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை

  • September 19, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில […]