ஆசியா

தைவானைக் கைப்பற்றுவோம் – மீண்டும் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சீனா

தைவானைக் கைப்பற்றப் போவதாக மீண்டும் சீனா எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச இராணுவ அதிகாரிகளிடையே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் டாங் ஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சா்வதசே ஒழுங்கை நிலைநாட்டுவதில் தைவான் விவகாமும் உள்ளடங்கும். அந்தப் பகுதி மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சா்வதேச ஒழுங்கு ஏற்படாது என்றார்.

தைவானில் பிரிவினைவாத சக்திகள் தலையெடுத்து, சீனாவிடமிருந்து சுதந்திரம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

அத்தகைய முயற்சியை இரும்புக் கரம் கொண்டு நசுக்க சீன ராணுவம் தயாராக இருக்கிறது.

சில வெளிநாடுகள் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்காக இந்த விவகாரத்தில் சாா்பு நிலை எடுப்பது சா்வதேச பதற்றத்துக்குத்தான் இடமளிக்கும் என்று அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டு டாங் ஜன் எச்சரித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்