பதவி விலக தயாராகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை மறுதினம் தேசிய மிதவாதக் கட்சி கூடுவதற்குள் அறிவிப்பு வந்துவிடலாம் என கூறப்படுகின்றது. கட்சிக்குப் புதிய தலைவர் கிடைக்கும் வரை ட்ரூடோ தற்காலிகமாகப் பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை. 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ட்ரூடோ அண்மைக் காலத்தில் மக்களின் ஆதரவை இழந்துள்ளார். விலைவாசி உயர்வு…அதிகரிக்கும் பணவீக்கம் முதலியவற்றால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் ட்ரூடோ பதவி விலக நெருக்குதல் கூடியுள்ளது. கனடாவில் […]













