செய்தி முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பதவி விலக தயாராகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாளை மறுதினம் தேசிய மிதவாதக் கட்சி கூடுவதற்குள் அறிவிப்பு வந்துவிடலாம் என கூறப்படுகின்றது.

கட்சிக்குப் புதிய தலைவர் கிடைக்கும் வரை ட்ரூடோ தற்காலிகமாகப் பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை. 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ட்ரூடோ அண்மைக் காலத்தில் மக்களின் ஆதரவை இழந்துள்ளார்.

விலைவாசி உயர்வு…அதிகரிக்கும் பணவீக்கம் முதலியவற்றால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் ட்ரூடோ பதவி விலக நெருக்குதல் கூடியுள்ளது.

கனடாவில் இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். ட்ரூடோ பதவி விலகினால் தேர்தல் விரைவாக நடத்தப்படும் சாத்தியம் உள“ளதுஃ

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சமாளிக்கக் கனடா புதிய நிர்வாகத்தை நாடலாம் என்று கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி