இலங்கையை உலுக்கிய கோர விபத்து! தொழில்நுட்பக் கோளாறா அல்லது சாரதியின் அலட்சியமா? பொலிஸார் தீவிர விசாரணை
பதுளை, துன்ஹிந்த வீதியில் அண்மையில் இடம்பெற்ற பேரூந்து விபத்து, பேருந்தின் தொழிநுட்பக் கோளாறினால் ஏற்பட்டதா அல்லது சாரதியின் பிழையினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெற்றுள்ளது. பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த எல்ல பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் […]













