Nvidia முன்னாள் தலைமை நிர்வாகி செனட் விசாரணைக்கு அழைப்பு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் (Nvidia) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, அடுத்த மாதம் அமெரிக்க செனட் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.
திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவர் தனது பதவியிலிருந்து திடீரென விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி தன்னார்வ அடிப்படையில் செனட் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு ஜென்சன் ஹுவாங்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் தன்னார்வமாக ஆஜராக மறுத்தால், சாட்சியமளிப்பதைக் கட்டாயப்படுத்தும் வகையில் அழைப்பாணை பிறப்பிக்கப்படலாம் என்றும் செனட் குழு எச்சரித்துள்ளது.




