கன்னட சினிமா இயக்குனர் மற்றும் நடிகர் குருபிரசாத் தற்கொலை
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 52). இவர், கன்னட திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டாடா நியூ கெவன் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 1½ ஆண்டுகளாக இயக்குனர் குருபிரசாத் தங்கி இருந்தார். அவர் தனது முதல் மனைவியை பிரிந்து விட்டார். 2வதாக சுமித்ரா என்பவரை திருமணம் செய்து அடுக்குமாடி குடியிருப்பில் குருபிரசாத் வசித்து […]













