கட்டுநாயக்கவில் உள்நாட்டு விமான முனையம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,உள்நாட்டு விமான முனையம் ஒன்றை அமைப்பதற்காக 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப் போவதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.
“வெளிநாடுகளில் இருந்து கொழும்புக்கு வருவதை விட, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்று யாழ்ப்பாண மக்கள் எங்களிடம் கூறுகின்றனர்.
எனவே, கட்டுநாயக்கவில் ஒரு உள்நாட்டு விமான முனையம் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இதற்கான பணிகளைத் தொடங்குவோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு உள்நாட்டு முனையம் இருந்தாலும், அது பெரும்பாலும் சிறிய ரக ‘எயர் டாக்ஸி’ (air taxi) விமானங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான உள்நாட்டு வணிக ரீதியிலான விமானங்கள், இரத்மலானை விமான நிலையத்திலிருந்தே இயக்கப்படுகின்றன.




