செய்தி

இலங்கையில் 20 ரூபாய் வரை குறையும் முட்டை விலை – மீண்டும் அதிகரிக்கும்

  • December 29, 2024
  • 0 Comments

கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் பின்னர் மீண்டும் முட்டை விலை உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி வாழ்வியல்

எலும்புகளை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!

  • December 29, 2024
  • 0 Comments

அன்றாட வாழ்க்கையில் சரிவிகித உணவு, தினசரி உடற்பயிற்சி ஆகியவை ஆரோக்கியமாக இருக்க இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால் எலும்பு புற்றுநோய், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தொற்று, ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோனெக்ரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற பல நோய்கள் எலும்புகளை சீரழிக்கும். சில நோய்கள் மரபணு காரணமாக ஏற்பட்டாலும், அன்றாடம் நாம் செய்யக்கூடிய சில தவறுகளும் எலும்பு ஆரோக்கியத்தை கெடுப்பவையாக இருக்கின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம். 1. டீ காபி: […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிலேயே மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

  • December 29, 2024
  • 0 Comments

உலகில் அதிக சதவீத மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ள நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. உலக புள்ளிவிபரங்களின் தரவரிசையில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கமைய, உலகிலேயே அதிக ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான நாடாக சீனா மாறியுள்ளது. இந்த பட்டியலில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதும் சிறப்பம்சமாகும். இந்த தரவரிசையில் மலேசியா மற்றும் பிரேசில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்பட்டியலில் ஐந்தாவது இடம் தென்கொரியாவுக்கும், ஆறாவது இடம் ஈரானுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில், […]

செய்தி

2025ஆம் ஆண்டு மெல்போர்னில் வீடு வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • December 29, 2024
  • 0 Comments

மெல்போர்ன் மற்றும் சிட்னியில் உள்ள வீடுகளின் விலை 2025ஆம் ஆண்டிற்குள் மேலும் குறையும் என சமீபத்திய SQM அறிக்கையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் சராசரி சராசரி வீட்டின் விலை 1 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் மெல்போர்ன் நகரப் பகுதியில் வீடுகளின் விலை 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகக் குறையும் என்றும் அது கூறுகிறது. 2025 ஆம் ஆண்டில், பெர்த் நகரப் பகுதியில் மிக அதிகமான வீட்டு […]

செய்தி

இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி?

  • December 29, 2024
  • 0 Comments

இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளவும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில், இருக்கும் பெரிய தலைவலியான விஷயமே நாம் ஆர்வமாக எதாவது பார்த்துக்கொண்டிருந்தோம் என்றால் இடையில் திடீரென எதாவது விளம்பரம் வரும். அதனை பார்க்கும்போது அய்யோ நடுவில் இது வேற வருகிறதே என நமக்கு அந்த வீடியோ பார்க்கும் ஆர்வமும் கூட போய்விடும். விளம்பர பிரச்சனை இல்லாமல் வீடியோக்களை பார்க்கவேண்டும் என்றால் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை – பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மீண்டும் விநியோகம்

  • December 29, 2024
  • 0 Comments

இலங்கையில் பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய், மஞ்சள், மசாலா வகைகளுடன் பல்வேறு வகையான மா கலக்கப்படுவது தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட தெரிவித்தார். பண்டிகைக் காலத்தை மையமாக கொண்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை […]

செய்தி விளையாட்டு

வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை அறிவித்த ஐசிசி!

  • December 29, 2024
  • 0 Comments

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளிலிருந்து வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான முதல் கட்ட போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது. வளர்ந்து வீரர்களுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சைம் ஆயுப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் மற்றும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான தென் கொரிய விமானம் – 28 பேர் பலி – பலரின் நிலை கவலைக்கிடம்

  • December 29, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துடன் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பெங்கொக்கில் இருந்து 175 பயணிகள் உட்பட 181 பேரை ஏற்றிக் கொண்டு, இன்று விமானம் ஒன்று தென்கொரியா புறப்பட்டது. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமான நிலையம் சியோலுக்கு தெற்கே 300 கிலோ மீற்றர் தொலைவிலும், வடகொரிய எல்லையில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. விமானம் கீழே விழுந்து […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை – காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • December 29, 2024
  • 0 Comments

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மேல், சப்ரகமுவ, […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 400 பயணிகளுடன் ஓடும் ரயிலில் சாரதியால் ஏற்பட்ட பரபரப்பு

  • December 29, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஓடிக் கொண்டிருந்த அதிவேக ரயிலின் ஓட்டுநர் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் போது சாரதி உயிரிழந்த போதிலும் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அப்போது சாரதியின் கட்டுப்பாட்டின்றி ரயில் ஓடியதால், தானியங்கி கட்டுப்பாட்டின் மூலம் ரயிலை நிறுத்த முடிந்தது. கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 9 மணியளவில், பிரான்ஸ் தலைநகருக்கு தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகருக்கு அருகில் ரயில் […]