இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 400 பயணிகளுடன் ஓடும் ரயிலில் சாரதியால் ஏற்பட்ட பரபரப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஓடிக் கொண்டிருந்த அதிவேக ரயிலின் ஓட்டுநர் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் போது சாரதி உயிரிழந்த போதிலும் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அப்போது சாரதியின் கட்டுப்பாட்டின்றி ரயில் ஓடியதால், தானியங்கி கட்டுப்பாட்டின் மூலம் ரயிலை நிறுத்த முடிந்தது.

கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 9 மணியளவில், பிரான்ஸ் தலைநகருக்கு தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகருக்கு அருகில் ரயில் நின்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ரயில் பயணிகளுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக வீட்டுக்குச் செல்லும் மக்களால் பாரிஸிலிருந்து Saint-Etienne செல்லும் ரயில் சேவை நிரம்பியிருந்தது.

சாரதி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி