பொழுதுபோக்கு

ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்….

  • December 29, 2024
  • 0 Comments

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே மாஸ் வெற்றியை ருசித்த பிரதீப், அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கினார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்ததோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. இப்படத்துக்கு பின் பிரதீப்புக்கு ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் […]

ஆசியா

தென்கொரியா விமான விபத்து : பலி எண்ணிக்கை 167 ஆக உயர்வு!

  • December 29, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது 167 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெஜு ஏர் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. புதுப்பிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை தேசிய தீயணைப்பு நிறுவனம் வழங்கியது. விபத்து நடந்த சில மணிநேரங்களில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவந்த நிலையில் 124 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்தியா

இந்தியாவின் மணிப்பூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் செய்தியாளர் ஒருவருக்கு காயம்

  • December 29, 2024
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செய்தியாளர் ஒருவர் காயமுற்றார். அந்தக் காணொளிச் செய்தியாளரின் (video journalist) இடது தொடையில் தோட்டாக் காயங்கள் ஏற்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தாம்னொக்பி கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தச் செய்தியாளர் காயமுற்றார் என்று காவல்துறை தெரிவித்தது. தாம்னொக்பி, சனசபி பகுதிகளில் நிகழ்ந்துள்ள இந்த ஆக அண்மைய தாக்குதலுக்கு எதிராக மணிப்பூர் முதலமைச்சர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து – ஒருவர் மரணம்

  • December 29, 2024
  • 0 Comments

மோசமான வானிலையால் டிசம்பர் 28ஆம் திகதி அமெரிக்கா முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமானதாகவும் 200க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘ஃபிளைட்அவேர்’ இணையத்தளம் அவ்வாறு கூறியது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கடுமையான சுழல் காற்று வீசிய நிலையில், மேற்குக் கரையில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த காற்றும் வீசியது. விடுமுறைப் பயணம் மேற்கொள்வோர் மிகவும் அவதிப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அட்லான்டாவின் ஹர்ட்ஸ்ஃபீல்டு-ஜேக்சன் அனைத்துலக விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி விமானச் சேவைகள் தாமதமானதாக […]

இலங்கை

இலங்கை – தாயின் வலி நிவாரணி மருந்தை குடித்த குழந்தைக்கு நேர்ந்த கதி!

  • December 29, 2024
  • 0 Comments

காலில் ஏற்பட்ட காயத்திற்காக தாய்க்கு கொண்டு வந்த வலிநிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது. புத்தளம் கலடிய பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு வயது ஏழு மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மண்டித் என்பவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்குச் செல்ல பெற்றோர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த தாயின் பாதத்தில் கொண்டு வந்த திரவ வலிநிவாரணி மருந்தை சிறு குழந்தை எடுத்துச் […]

இலங்கை

இஸ்ரேலில் பணிப்புரிந்த இலங்கை இளைஞர்களுக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பு!

  • December 29, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் விவசாயத் துறையில் சட்டரீதியாக வேலைக்குச் சென்று இந்நாட்டுக்கு வந்த இளைஞர்கள் குழுவொன்று மீண்டும் இஸ்ரேலில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இவர்களுக்கான விமான டிக்கெட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வளாகத்தில் அண்மையில் வழங்கப்பட்டது. 79 இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன, அவர்கள் இஸ்ரேலில் 5 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சேவைக் காலத்தைக் கொண்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

பேபி ஜான் படத்தால் அட்லீக்கு இத்தனை கோடி நஷ்டமா?

  • December 29, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் கடைசியாக இயக்கிய படம் பிகில். விஜய் நடித்த இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இதற்கு காரணம் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீ […]

உலகம்

காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் பிரதிநிதிகளை சந்தித்த கத்தார் பிரதமர்

  • December 29, 2024
  • 0 Comments

கத்தார் பிரதமரும் நிதியமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி, டிசம்பர் 28ஆம் திகதி, டோஹாவில் ஹமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்துள்ளார். காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் தெளிவான, விரிவான சண்டைநிறுத்த ஒப்பந்தம் குறித்துக் கலந்துரையாடுவது அச்சந்திப்பின் நோக்கம். மூத்த அதிகாரி கலில் அல் ஹய்யா தலைமையிலான ஹமாஸ் பேராளர் குழுவுடன் பிரதமர் ஷேக் முகமது கலந்துரையாடியதாகக் கத்தார் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. கத்தார்ப் பிரதமர் இந்த சமரசப் பேச்சில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தங்குமிடமில்லாமல் லட்ச கணக்கானோர் தவிப்பு – கடும் நெருக்கடியில் மக்கள்

  • December 29, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் ஜனவரியில் ஒரு இரவில், ஏறக்குறைய 771,480 பேருக்குத் தங்குமிடமில்லாமல் போயுள்ளதாக வீடமைப்பு, நகர வளர்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் அதிகம் என திணைக்கள தகவலில் தெரியவந்துள்ளது. கட்டுப்படியாகாத வீட்டு விலை, விலைவாசி உயர்வு, இனவாதம், இயற்கைப் பேரிடர்கள், அதிகரிக்கும் வெளிநாட்டினரின் வருகை ஆகியவை அமெரிக்காவில் குடியிருக்க வீடுகள் இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்களாகியுள்ளது. இவ்வாண்டு 771,000க்கும் அதிகமானோர் குடியிருக்க வீடுகளின்றி இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அவர்களில் 32 சதவீதமானோர் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இளைஞர், யுவதிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல் – 1000 யூரோ நிதி கொடுப்பனவு

  • December 29, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளும் இளைஞர்-யுவதிகளுக்கு 1000 யூரோ நிதியுதவி வழங்கவுள்ளதாக பசுமை கட்சி தெரிிவத்துள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள பல்வேறு சலுகைகள் கட்சிகளால் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் பசுமை கட்சியின் தலைவர் ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொழில் பயிற்சி கல்வியை மேற்கொள்வோர் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக 1000 யூரோ நிதி உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் […]