இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

BREAKING – நடிகர் அல்லு அர்ஜுன் கைது

  • December 13, 2024
  • 0 Comments

புஷ்பா 2 தி ரூல் பட நாயகன் அல்லு அர்ஜுன், இன்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இதில், முதல் ப்ரீமியர் ஷோவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுனை கைது செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இன்று இரவு விண்கல் மழைப் பொழிவு! இலங்கையர்கள் பார்க்கலாம்

  • December 13, 2024
  • 0 Comments

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை அவதானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இரவு காண முடியும் என ஆர்தர் சி.கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதன் முழுமையான அனுபவத்தை நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் காண முடியும். இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் மணித்தியாலத்துக்கு 120 விண்கற்கள் தோன்றும் என ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் வானியல் […]

இலங்கை

இலங்கையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

  • December 13, 2024
  • 0 Comments

இலங்கையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா செய்தி

பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விசேட அறிவிப்பு

  • December 13, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இருந்து பெர்த் நகருக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு அம்மை நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வெளிநாட்டவர் டிசம்பர் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிங்கப்பூரில் இருந்து பேர்த் வந்தடைந்ததாகவும், அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான SQ225 இல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் பெர்த்தில் தட்டம்மை நோயாளி ஒருவர் கண்டறியப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த நாட்களில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் தட்டம்மை பரவி வருகிறது. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் […]

பொழுதுபோக்கு

TR குரலுக்கு செம ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்… வைரலாகும் சிக்கிடு வைப்

  • December 13, 2024
  • 0 Comments

நேற்று ரஜினி தன்னுடைய 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி டீம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. அப்படத்திலிருந்து கிலிம்ஸ் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. சிக்கிடு வைப் என்ற பெயரில் வெளியான அந்த மியூசிக் இப்போது வைரலாகி வருகிறது. அதில் டி ராஜேந்தர் குரலில் செம ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. கடந்த சில படங்களில் அவர் ஆடவில்லை ஹீரோயின் தான் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

365 சேவைகளை திடீரென முடக்கிய மைக்ரோசாப்ட்? பயனர்கள் அதிர்ச்சி

  • December 13, 2024
  • 0 Comments

அவுட்லுக், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் பிற உற்பத்தித்திறன் பயன்பாடுகளுக்கு வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 365, கிளவுட் அடிப்படையிலான சந்தா சேவை தற்போது உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு முடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரெட்டோண்ட் (Redmond) தளமாகக் கொண்ட நிறுவனம் அதிகாரப்பூர்வ மைக்ரோசாஃப்ட் 365 ஸ்டேட்டஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சில பயனர்கள் இணையத்தில் மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகளை அணுக முடியாத ஒரு சிக்கல் எழுந்துள்ளது. மைக்ரோசாப்ட் […]

இலங்கை செய்தி

மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றார் என டக்லஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

  • December 13, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா குற்றம் சுமத்தியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா […]

செய்தி வாழ்வியல்

நாய்கள் ஊளையிடுவது ஏன்? அறிவியல் ஆச்சரிய தகவல்கள்

  • December 13, 2024
  • 0 Comments

நாய்கள் ஓநாய் இனத்தில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை. அவ்வபோது அவை தனிமையை உணரும் போது ஊளையிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆதிகாலம் முதல் இன்று வரை மனிதனின் சிறந்த செல்ல பிராணியாக, சிலருக்கு நண்பன் போலவும், சிலருக்கு வீட்டில் ஒரு நபர் போலவும் நாய்கள் இருக்கின்றன. விஸ்வாசமுள்ள ஜீவனாக நாய்கள் பார்க்கப்படுகிறது. இவை பொதுவாக பாதுகாப்பு குணம் கொண்டவை, வீடு முதல் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ராணுவம் வரை சேவையாற்றி வருகின்றன. 2016ல் நடத்தப்பட்ட கன்ஸ்யூமர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 90 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த பாட்டி

  • December 13, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 90 வயதில் பட்டப்படிப்பை முடித்த பெண் ஒருவர் குறித்த செய்தி பதிவாகியுள்ளது. நவம்பர் 23 ஆம் திகதி, 90 வயதான Annette Roberge, Southern New Hampshire பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த பெண் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது பிள்ளைகள் இருந்தமையினால் அவர் தனது படிப்பை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 5 பிள்ளைகளின் தாயான இவர், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்தின் மூத்த […]

இலங்கை செய்தி

இலங்கை நாடாளுமன்ற இணையத்தளத்தில் மற்றுமொரு அமைச்சரின் கலாநிதி பட்டம் நீக்கம்

  • December 13, 2024
  • 0 Comments

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் இருந்த கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஹர்ஷன நாணயக்கார தனிப்பட்ட முறையில் கௌரவ கலாநிதி பட்டம் ஒன்றை பெற்றதாக குறிப்பிடும் கடிதத்தை கையளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, உறுப்பினர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இணையத்தளத்திற்கு […]