கடனில் மூழ்கி தவிக்கும் பாகிஸ்தான் – உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டு
பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடன் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கடன் அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய 2015 ஆம் ஆண்டில் 68.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன், 2025 ஆம் ஆண்டில் 135.1 பில்லியன் அமெரிக்க டொலராக மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த மொத்தக் கடனில், 107.08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசு உத்தரவாதம் அளித்த கடனாகும். அதேநேரம் அரசு உத்தரவாதங்கள் இல்லாத தனியார் துறை வெளிநாட்டுக் கடனின் அளவு 17.58 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
கூடுதலாக, குறுகிய கால வெளிநாட்டுக் கடனின் அளவு 10.45 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உத்தரவாதமளித்த கடனில் மிகப்பெரிய பங்கான 56.83 பில்லியன் அமெரிக்க டொலர் பலதரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட கடனின் அளவு 42.43 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் ஒற்றை மிகப்பெரிய நாடாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது என்றும், சீனாவுக்கு பாகிஸ்தான் செலுத்த வேண்டிய கடன் சுமார் 22.4 பில்லியன் டொலர் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




