பொழுதுபோக்கு

ஜூனியர் NTR கட்அவுட் தீயிட்டு கொளுத்தினார்களா? நடந்தது என்ன?

  • September 27, 2024
  • 0 Comments

டோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படம் அவரது 30வது படமாக இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. ஜூனியர் என்டிஆருடன் முதல்முறையாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் ஜான்வி கபூர். சையத் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தை முன்னதாக ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா படத்தை போலவே மிகவும் மொக்கையாக்கியுள்ளார் கொரட்டாலா சிவா என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் படத்தை பார்த்துவிட்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள், […]

ஆசியா

ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தேர்வு

  • September 27, 2024
  • 0 Comments

ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா, 67, தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.அக்டோபர் 1ஆம் திகதி அவர் ஜப்பானின் 102வது பிரதமராகப் பதவி ஏற்பார். தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதே நாளில் அதிகாரபூர்வமாகப் பதவி துறப்பார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிதவாத ஜனநாயகக் (எல்டிபி) கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுபவரே பிரதமர் நாற்காலியில் அமர்வார்.அதனால், அந்தப் பதவிக்கு இம்முறை வரலாறு காணாத போட்டி நிலவியது. தலைமைத்துவத் தேர்வுக்கான […]

மத்திய கிழக்கு

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு ; 700-ஐ கடந்த பலி எண்ணிக்கை

  • September 27, 2024
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700க்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் […]

பொழுதுபோக்கு

மெய் மறக்க வைத்ததா “மெய்யழகன்”…

  • September 27, 2024
  • 0 Comments

நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த ‘ஜப்பான்’ திரைப்படம், மோசமான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்த நிலையில், (செப்டமபர் 27) அதாவது இன்று, கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘மெய்யழகன்’. இந்த படத்தை, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ராஜ்கிரண், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா – ஜோதிகா 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். மாமன் – மச்சான் இடையே இருக்கும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 40 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • September 27, 2024
  • 0 Comments

பிரித்தானியர்கள் பாரிய மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளனர். மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படும் நிலையில்  சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்து முழுவதும் 40க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இருந்த பள்ளிகள் மூடப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது. மிட்லாண்ட்ஸ், ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மற்றும் கிழக்கு ஆங்கிலியாவின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் அம்பர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!

  • September 27, 2024
  • 0 Comments

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்துள்ளார்.

மத்திய கிழக்கு

முழு பலத்துடன் ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் உத்தரவு!

  • September 27, 2024
  • 0 Comments

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை முழு பலத்துடன் தாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்காவும் மற்ற நட்பு நாடுகளும் போர்நிறுத்தத்தை பரிசீலிக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று (26) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 92 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஹிஸ்புல்லாஹ் ட்ரோன் படையின் தலைவர் மொஹமட் சுரூர் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு […]

பொழுதுபோக்கு

22 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

  • September 27, 2024
  • 0 Comments

தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய படம் தான் GOAT. இப்படம் ரசிகர்களுக்கு சிறந்த என்டர்டெய்மன்டாக வந்திருந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸ் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். மேலும் 80ஸ் சினிமாவில் கலக்கிய மோகன் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் 22 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள GOAT திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 22 நாட்களில் உலகளவில் ரூ. […]

வட அமெரிக்கா

நியூயார்க்கில் அமெரிக்க – சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே சந்திப்பு

  • September 27, 2024
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நியூயார்க்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்திக்கவிருக்கிறார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சு இத்தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவுக்கான மேம்பட்ட கணினிச் சில்லுத் தொழில்நுட்ப ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள், வர்த்தக வரிகள், தைவான் விவகாரம், மனித உரிமை விவகாரம், காஸாவிலும் உக்ரேனிலும் நடக்கும் போர்கள் ஆகியவை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. சீன வெளியுறவு […]

இலங்கை

இலங்கையில் அநுரவின் உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அதிரடி நடவடிக்கை!

  • September 27, 2024
  • 0 Comments

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கையின் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இரண்டு வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவர் தனது நஷ்ட ஈட்டு தொகையை செலுத்தியுள்ளார். இது தொடர்பில் விளக்கமளித்த மேல்மாகாண சபையின் செயலாளர் எஸ்.எல். தம்மிகா  மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் […]

error: Content is protected !!