இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் தயார்

  • September 3, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 04 இலட்சத்து, 92 ஆயிரத்து 280 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் குறை நிரப்பு பட்டியலில் இருந்து 2ஆயிரத்து 463 பேர் இணைக்கப்பட்டுள்ளர். அதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு […]

இலங்கை செய்தி

தமிழரசு கட்சி தனக்கு தானே வேட்டு வைத்துள்ளது

  • September 3, 2024
  • 0 Comments

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோரியுள்ளமையானது , அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தமிழினத்தின் சுதந்திரத்தையும் , சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் […]

இலங்கை செய்தி

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

  • September 3, 2024
  • 0 Comments

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன் தமிழ் தேசிய […]

இந்தியா செய்தி

இந்திய-வங்காளதேச எல்லையில் 195 நட்சத்திர ஆமைகளுடன் ஒருவர் கைது

  • September 3, 2024
  • 0 Comments

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் (IBB) 195 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கைது செய்தது. நட்சத்திர ஆமைகள் இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள், மேற்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன. நட்சத்திர ஆமைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது கூட இந்தியாவில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. “சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று நபர்கள் தலையில் சாக்குகளுடன் இந்திய-வங்காளதேச எல்லையை நோக்கிச் செல்வதை தரலி-I எல்லைப் புறக்காவல் நிலையத்தில் உள்ள […]

ஆசியா செய்தி

புருனே நாட்டுக்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி

  • September 3, 2024
  • 0 Comments

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக இன்று புருனே நாட்டுக்கு சென்றார். அங்கு புருனே பிரதமர் அலுவலகத்தின் பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா உற்சாகமாக வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இருநாட்டின் கொள்கை விவகாரங்கள் குறித்து இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் மகளை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தாய் மற்றும் காதலன் கைது

  • September 3, 2024
  • 0 Comments

கார்ன்வாலைச் சேர்ந்த ஒரு பெண் தனது காதலனுடன் இணைந்து ஆறு வயது மகளை போதைப்பொருள் வழங்கி பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாதுகாப்பதற்காக அடையாளங்கள் மறைக்கப்பட்ட தம்பதியினருக்கு பிளைமவுத் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. கிழக்கு கார்ன்வாலைச் சேர்ந்த பெண்ணுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், வடக்கு கார்ன்வாலைச் சேர்ந்த ஆணுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்தப் பெண் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். மே 2024 இல் ட்ரூரோ கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற […]

ஐரோப்பா

2 அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்: 15 பேர் துருக்கியில் கைது

இஸ்மிர் நகரில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்களை உடல் ரீதியாக தாக்கிய அமெரிக்க எதிர்ப்பு இளைஞர் அமைப்பின் 15 உறுப்பினர்களை துருக்கிய அதிகாரிகள் கைது செய்ததாக அரசு நடத்தும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசபக்திக் கட்சியுடன் இணைந்த துருக்கிய இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டதாக நிறுவனம் கூறியது. அமெரிக்க தூதரகம் சம்பவத்தை உறுதிப்படுத்தியது, “அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மீதான இந்த தாக்குதலால் நாங்கள் கவலையடைந்துள்ளோம், மேலும் துருக்கிய போலீசார் […]

பொழுதுபோக்கு

பாலியல் குற்றச்சாட்டில் நடிகர் நிவின் பாலியும் சிக்கினார் ; யாரும் தப்ப முடியாது

  • September 3, 2024
  • 0 Comments

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. முன்னணி நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிவின் […]

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற வங்கதேசம்

  • September 3, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் […]

பொழுதுபோக்கு

கமலஹாசனுடன் உதட்டு முத்தம் ; அக்கா தங்கை இருவருக்கும் ஏற்பட்ட நிலை

  • September 3, 2024
  • 0 Comments

அண்மைக் காலமாக சினிமாவில் பாலியல் வழக்குகளும் அது தொடர்பான அறிக்கைகளும் வெளிவந்துள்ள நிலையில் பல நடிகைகளும் தமக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரபல நடிகை ராதிகா கூறியிருக்கும் கருத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதிகா கேரவனில் கூட நடிகைகளுக்கு தெரியாமல் சிலர் கேமராக்கள் பொருந்துவதாக கூறி பகீர் கிளப்பினார். மேலும், நடிகை ராதிகா முத்தத்துக்கு பெயர் போன நடிகர் படத்தில் தன்னையும் தன்னுடைய தங்கையையும் கட்டாயப்படுத்தி முத்த காட்சியில் […]