இந்திய-வங்காளதேச எல்லையில் 195 நட்சத்திர ஆமைகளுடன் ஒருவர் கைது
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் (IBB) 195 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கைது செய்தது.
நட்சத்திர ஆமைகள் இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள், மேற்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன.
நட்சத்திர ஆமைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது கூட இந்தியாவில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.
“சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று நபர்கள் தலையில் சாக்குகளுடன் இந்திய-வங்காளதேச எல்லையை நோக்கிச் செல்வதை தரலி-I எல்லைப் புறக்காவல் நிலையத்தில் உள்ள துருப்புக்கள் கண்டனர்.
சோதனையின் பொது இருவர் தப்பியோடிவிட்டனர், மூன்றாவது நபர் சாக்கு மூட்டைகளுடன் பிடிபட்டார். சாக்குப்பையை திறந்து பார்த்தபோது ஆமைகள் கண்டெடுக்கப்பட்டன.
கடத்தல்காரரை எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் வாழ்வாதாரத்திற்காக சிறு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.