பொழுதுபோக்கு

பாலியல் குற்றச்சாட்டில் நடிகர் நிவின் பாலியும் சிக்கினார் ; யாரும் தப்ப முடியாது

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது.

முன்னணி நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார்.

வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமான நிவின் பாலி பின்பு ரிச்சி என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார்.

எனினும் மலையாலத்தில் அவர் நடித்திருந்த பிரேமம் படம் மொழிகளைத்தாண்டி பட்டி தொட்டியெங்கும் பிரபல்யமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்