பொழுதுபோக்கு

மாஸ் காட்டும் விஜய்… முதல்நாள் ப்ரீ புக்கிங் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா??

  • September 4, 2024
  • 0 Comments

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் பிரபலம். வசூல் நாயகன். இவர் நடிப்பில நாளை உலகம் முழுவதும் கோட் படம் வெளியாகின்றது. இவர் படம் வருகிறதா அப்போது கண்டிப்பாக அவரது படத்தை வாங்கலாம் என விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு படத்தை வாங்குவார்கள். அப்படி தான் விஜய் நடித்துள்ள கோட் படத்தை எல்லா ஏரியாக்களிலும் போட்டிபோட்டு வாங்கியுள்ளனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் அனைத்து இடங்களுக்கும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயன்படுத்திய ஐபோன் வாங்க திட்டமிடுகின்றீர்களா? அவதானம்

  • September 4, 2024
  • 0 Comments

பிரீமியம் போனான ஐபோன் வாங்க வேண்டும் என்ர ஆசை பலருக்கு இருக்கும். எனினும் புதிய ஐபோன் வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காததால் பழைய ஐபோனை வாங்க பலர் திட்டமிடலாம். எனினும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் போனை வாங்கிய பிறகு நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். புதிய ஐபோன் சீரிஸ் வந்தவுடன் பலரும் பழைய ஆப்பிள் ஐபோனை (Apple iPhone) விற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் . இதை பயன்படுத்திக் கொண்டு பலர் பழைய ஐபோனை வாங்குகிறார்கள். […]

செய்தி

இலங்கை மக்களுக்கு வருட இறுதி தொடர்பில் எச்சரிக்கை

  • September 4, 2024
  • 0 Comments

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரத்துக்கமைய, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தற்போதைய மழையுடனான காலநிலையையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், டெங்கு நோய் அதிகளவில் பதிவாகும் பகுதிகளில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த நிலைமை தொடருமாயின் வருட இறுதியில் நாட்டில் […]

இலங்கை செய்தி

இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி!

  • September 4, 2024
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 […]

வாழ்வியல்

அளவிற்கு அதிகமான முட்டை சாப்பிடுவதால் ஆபத்து

  • September 4, 2024
  • 0 Comments

முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. புரத சத்து மிக்க முட்டையை காலை உணவாக சாப்பிடுபவர்கள் ஏராளம். தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. ஆனால், முட்டைகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காலை உணவிற்கு முட்டை மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. முட்டையை பல வகைகளில் சாப்பிடலாம். காலை உணவாக இதை சாப்பிட்டால் வயிறு நீண்ட […]

உலகம் செய்தி

தாய்லாந்தில் காதலர்கள் காதலிகளை சந்திக்க சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் நிறுவனம்

  • September 4, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வேறு எந்த நிறுவனமும் வழங்காத வழக்கத்திற்கு மாறான சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது. டிண்டர் விடுப்பு என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விடுமுறையை, வருடாந்திர விடுப்பு அல்லது நோய்வாய்ப்பட்ட விடுப்பு போன்ற ஊதியத்துடன் கூடிய விடுப்பு வடிவில் ஊழியர்கள் எடுக்கலாம் என மார்க்கெட்டிங் ஏஜென்சியான Whiteline Group அறிவித்துள்ளது. ஜூலை முதல் டிசம்பர் வரை செயல்படும் இந்த அமைப்பு, இந்த விடுமுறையில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு டேட்டிங் பயன்பாட்டைப் பயன்படுத்தவும் புதிய நண்பர்களைக் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விரும்பிய நேரத்தில் உறக்கம் மற்றும் வேலை நேரத்தை தேர்வு செய்ய அனுமதி

  • September 4, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனம், தேசிய மற்றும் உலகளாவிய பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய புதிய வேலைவாய்ப்புப் போக்கை கணித்துள்ளது. ‘Chrono-working’ எனப்படும் இந்த முறை, ஆஸ்திரேலிய பணியாளர்களை புரட்சி செய்யும் புதிய வேலைவாய்ப்புப் போக்கு என்று கூறப்படுகிறது. ‘Chrono-working’என்பது பிரித்தானியாவில் ஒரு புதிய கருத்தாகும், இது ஊழியர்கள் தங்கள் இயற்கையான தூக்க முறைகளின் அடிப்படையில் தங்கள் வேலை நேரத்தை தேர்வு செய்ய அனுமதிக்கும். இந்த முறை பிரித்தானியாவில் உள்ள பத்திரிகையாளர் எலன் சி. […]

உலகம்

கொங்கோவில் உள்ள மிகப்பெரிய சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் மரணம்

  • September 4, 2024
  • 0 Comments

கொங்கோவில் உள்ள மிகப்பெரிய சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர். கொங்கோமாநிலத்தின் தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறை முகாமில் இருந்து அவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறையின் நிர்வாக கட்டிடத்திற்கு தீ வைத்து கைதிகள் தப்பிக்க முயன்றனர். இந்த தீ விபத்தில் சிறைச்சாலையின் நிர்வாக கட்டிடங்கள், காப்பகங்கள், மருத்துவமனைகள் மற்றும் உணவுக் கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் உள்விவகார அமைச்சர் […]

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஷ் முன்னேற்றம்!

  • September 4, 2024
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஷ் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிநேற்று நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக […]

செய்தி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

  • September 4, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது. இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்கள், சிரேஷ்ட உதவி மற்றும் உதவி பொலிஸ் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்களிப்பைப் பதிவு செய்ய முடியும். அத்துடன் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு […]