வட அமெரிக்கா

கல்விக்கு வயது தடையில்லை – அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்ற 105 வயது பெண்

  • June 20, 2024
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த 105 வயது பெண் ஒருவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெர்ஜினியா ஹிஸ்லோப் என்ற வயோதிப ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அது அவர் 83 ஆண்டுக்கு முன்பு தொடங்கிய பயணமாகும். 1941ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெறத் தேவையான பாடங்கள் அனைத்தையும் அவர் பூர்த்தி செய்துவிட்டார். அப்போது அமெரிக்கா 2ஆம் உலகப் போரில் போரிட தயாராகிக்கொண்டிருந்தது. அவரது காதலனும் போரில் சண்டையிடவிருந்தார். ஆய்வறிக்கையை கைவிட்டுவிட்டுத் திருமணம், குடும்பம் ஆகியவற்றைத் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கைக்குண்டுடன் தனியார் வகுப்புகளுக்குச் சென்ற மாணவன்

  • June 20, 2024
  • 0 Comments

ஹசலக்க பிரேதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் கைக்குண்டுடன் தனியார் வகுப்புகளுக்கு சென்றதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர், தனியார் வகுப்பு ஆசிரியர் அதனை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹசலக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரதேச பாடசாலை ஒன்றில் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஹசலக பஹே எல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் தனது வீட்டிற்கு அருகாமையில் ஓடும் ஓடையில் குளித்துக் கொண்டிருந்த […]

விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி – சுப்பர் 8 சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து

  • June 20, 2024
  • 0 Comments

இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இங்கிலாந்து மிக இலகுவாக வெற்றி பெற்றது. பில் சோல்ட், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர்களை சிதறடித்து இங்கிலாந்தை இலகுவாக வெற்றி பெறச் செய்தனர். குழுநிலைப் போட்டிகளின் கடைசிக் கட்டத்தில் தட்டுத்தடுமாறி […]

இலங்கை செய்தி

சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

  • June 20, 2024
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் அவர் இலங்கையை வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவிலான விடயங்கள் குறித்துச் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

வாழ்வியல்

முதுகு வலி ஏற்பட காரணங்களும் அதனை சரி செய்யும் முறையும்

  • June 20, 2024
  • 0 Comments

முதுகு வலி ஏற்பட காரணங்களும் அதனை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் உடலில் உள்ள அனைத்து தசைகளின் அழுத்தமும் முதுகுத்தண்டில் சேர்வதன் மூலம் அங்கு வலி ஏற்படுகிறது. தினசரி வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் முதுகுவலி வர காரணமாக உள்ளது. முதுகு வலி ஏற்பட காரணங்கள்: இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் அணிவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த இறுக்கமான ஆடைகளை அணியும் போது தசைகளுக்கு அழுத்தம் […]

உலகம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

  • June 20, 2024
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 2.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.14 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் வரலாற்று தோல்வியை சந்திக்கும் அபாயத்தில் கன்சர்வேடிவ் கட்சி – ரிஷியின் நிலை

  • June 20, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வரவிருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வரலாற்று தோல்வியை சந்திக்கக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 53 உறுப்பினர் மட்டுமே எஞ்சியுள்ளனர் மற்றும் ரிஷி சுனக் தனது இடத்தை இழக்க நேரிடும் என இந்த கணிப்பில் தெரியவந்துள்ளது. லிபரல் டெமக்ராட்ஸ் (லிப் டெம்ஸ்) 50 உறுப்பினர் பெற கன்சர்வேடிவ் கட்சி மூன்றாம் இடத்தைப் பெறுவதற்குப் போராடக்கூடும் என்று கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. டோனி பிளேயரின் 1997ஆம் ஆண்டுசரிவை மிஞ்சி, 516 இடங்களையும், 382 பெரும்பான்மையையும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களுக்கு ஆண்டுக்கு 20,000 டொலர் சேமிக்க புதிய திட்டம்

  • June 20, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களுக்கு ஆண்டுக்கு 20,000 டொலர் சேமிக்க புதிய திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. வங்கி இருப்பை அதிகரிக்க மூன்று முக்கிய வழிகளை அறிமுகப்படுத்தி இந்த திட்டத்தை Smart Women Society நிறுவனர் Tea Angelos முன்வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் சேமிக்க விரும்பினால் 5000 டொலர், 10000 டொலர் மற்றும் 20000 டொலர் ஆகியவற்றைச் சேமிக்கப் பழக வேண்டும் என்று குறிப்பிடுகிறது. செலவழித்த ஒவ்வொரு டொலரையும் பதிவு செய்து, அந்த பணம் அத்தியாவசியப் பொருட்களுக்கு செலவிடப்பட்டதா என்று கேட்பதை வழக்கமாக்கிக் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் – முதலிடத்தை பிடித்த அமெரிக்க நகரம்

  • June 20, 2024
  • 0 Comments

உலகின் பணக்கார நகரங்களின் தரவரிசை அறிக்கைகள் வெளியாகியுள்ளது. Time out இதழ், பெரிய முதலீடுகள், அதிக மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் உயர்தர பணக்கார தனிநபர்களின் அளவுகோல்களின் அடிப்படையில் உலகின் பணக்கார நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. புதிய தரவுகளின்படி, பல ஆண்டுகளாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ உலகின் பணக்கார நகரமாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் பணக்கார நகரங்களில் டோக்கியோ மூன்றாவது இடத்திலும், சிங்கப்பூர் நான்காவது இடத்திலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

  • June 20, 2024
  • 0 Comments

யூடியூப் நிர்வாகம் தனது தளத்தில் மூன்றாம் தரப்பு ’ஆட் பிளாக்கர்’ எனப்படும் விளம்பரத் தடுப்பான்கள் மீது அடுத்தக்கட்ட போரினைத் தொடங்கியுள்ளது. கூகுள் மற்றும் யூடியூப் தளங்களின் வருவாய் என்பது விளம்பரம் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் வளர்ந்து வரும் வீடியோ தளமான யூடியூப் விளம்பரம் வாயிலாக தானும் வளம் கொழிப்பதோடு, தன்னை நம்பிய கிரியேட்டர்களையும் வாழ வைத்து வருகிறது. யூடியூப் வீடியோக்களின் இடையிடையே தோன்றும் இந்த விளம்பரங்களே யூடியூப் நிர்வாகம் முதல் அதன் கிரியேட்டர்கள் வரை சகலருக்கும் ஆதாரமாக […]

error: Content is protected !!