இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்து – சைக்கிளில் பயணித்தவர் படுகாயம்
கொழும்பு – கண்டிவ பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் கார் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் […]













