இலங்கை முழுவதும் இன்றும் பலத்த மழை பெய்யும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தென்மேற்குப் பகுதியில் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]













