இலங்கை

இலங்கை – வாத்துவ கடற்கரையில் ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

  • June 10, 2024
  • 0 Comments

வாத்துவ – பொஹத்தரமுல்ல கடற்கரையில் அணிந்திருந்த சட்டையால் முகத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை எனவும் வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். நீல நிற டெனிம் மற்றும் வெள்ளை காலுறை அணிந்த, 40-45 வயதுக்கு இடைப்பட்டவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரணம் தொடர்பான விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

போதை பொருள் பார்ட்டியில் பிரபல நடிகை.. நடிகர் சங்கம் கொடுத்த ஷாக் நியுஸ்

  • June 10, 2024
  • 0 Comments

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ஹேமா பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை பொருள் எடுத்து கொண்டு கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஹேமா, […]

இலங்கை

இலங்கையில் துப்பாக்கிச் சூடு – பரிதாபமாக பலியான நபர்

  • June 10, 2024
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நபர் ஹார்ட்வேயார் கடை ஒன்றை வியாபாரமாக நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு முதல் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

ஆசியா செய்தி

இஸ்ரேலிய அமைச்சரவையில் இருந்து விலகிய முக்கிய அமைச்சர்

  • June 10, 2024
  • 0 Comments

இஸ்ரேலிய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் அவசரகால அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். காசா பகுதிப் படையெடுப்பின் திட்டமிடல் பிழைகளை அவர் முன்பு அம்பலப்படுத்தினார். எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை மறுத்தார். நேற்று டெல் அவிவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பதவி விலகுவதாக அறிவித்த பென்னி காண்ட்ஸ், பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயம் செய்யுமாறு நெதன்யாகுவிடம் கேட்டுக் கொண்டார். கடந்த அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கி 1,200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்த பிறகு, […]

இலங்கை

இலங்கையில் 2 மாத குழந்தையின் உயிரை பறித்த சுவர்

  • June 10, 2024
  • 0 Comments

ஓமந்தை – புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று மாலை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 2 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவத்தின் போது குழந்தையின் தாயும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

  • June 10, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.98 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் இவ்வாறு பதிவாகியுள்ளது. இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.45 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

வாழ்வியல்

இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • June 10, 2024
  • 0 Comments

இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை.இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி […]

இலங்கை

இலங்கையில் காணி விற்பனையில் கடுமையாகும் கட்டுப்பாடு!

  • June 10, 2024
  • 0 Comments

காணி ஏலம் விடுபவர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கணக்குக் குழுவின் தலைமை தாங்கும் போதே இதனை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான சட்டரீதியான தீர்வொன்றின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். உள்ளுராட்சி அதிகாரிகளின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே அன்றைய தினம் கூட்டம் நடைபெற்றது. அத்தனகல்லையில் 300 காணிகள் பிரித்து […]

பொழுதுபோக்கு

மோடிக்கு வாழ்த்து கூறினார் விஜய்.. ஆனா ஸ்டாலினுக்கு இதுவரை வாழ்த்து சொல்ல இல்லையே…

  • June 10, 2024
  • 0 Comments

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும் பிரதமர் […]

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்திய அணி? Champions Trophy திகதி அறிவிப்பு

  • June 10, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே துவங்கி உள்ளது. அதன்படி, 2025 பிப்ரவரி 19 அன்று போட்டி துவங்கும் என்றும், இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், மொத்தம் 20 நாட்கள் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி […]