லண்டனில் திடீர் சுற்றிவளைப்பு – கட்டுக் கட்டாக மீட்கப்பட்ட பணம்
லண்டனில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெருமளவான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
லண்டனின் கேட்ஃபோர்டில் Catford வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த பொலிஸார் அதில் இருந்து 35000 பவுண்ட்ஸ் பணத்தை கைப்பற்றினர்.
சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக சாரதியுடன் தொடர்புடைய குடியிருப்பொன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து இரு படுக்கையறைகளில் ஷாப்பிங் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் £4 மில்லியன் ரொக்கப் பணம் கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
மேலும் 01 கிலோ கொக்கைன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ரொக்கப் பறிமுதல்களில் இதுவும் ஒன்று எனவும் மெட்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

