ஒரே பாலினத் திருமண மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவுள்ள தாய்லாந்து செனட்
ஒரே பாலினத் திருமண மசோதாவை நிறைவேற்ற தாய்லாந்தின் செனட் சபை விரைவில் ஒப்புதல் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசோதாவின் நிலவரம் குறித்து ஜூன் 18ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) தெளிவான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மசோதா சட்டமாகும் பட்சத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் ஒரே பாலினத் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடாக தாய்லாந்து இருக்கும். மசோதா நிறைவேற்ற தேவையான பணிகள் முடிந்துவிட்டதாக தாய்லாந்து அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 16) தெரிவித்தார். மசோதாவுக்கு செனட் சபை […]













