இலங்கை

வவுனியாவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

  • April 10, 2024
  • 0 Comments

வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நெளுக்குளம், குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

முதன்முறையாக தமிழில்… சன்னி லியோனுக்கு அடித்த அதிஷ்டம்

  • April 10, 2024
  • 0 Comments

பஞ்சாபி தம்பதிக்கு கனடாவில் பிறந்த நடிகை சன்னி லியோன் முதலில் ஆபாச நடிகையாக அறியப்பட்டார். பிறகு அதிலிருந்து ஒதுங்கி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்தச் சூழலில் அவர் M Tvயில் ஒளிபரப்பாகும் ஸ்ப்லிட்ஸ் வில்லாவின் 15ஆவது சீசனை தொகுத்து வழங்கவிருக்கிறார். கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். ஜெர்மன் பேக்கரியில் வேலை பார்த்துவந்த நிலையில் ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் நடித்ததால் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார். ஒருகட்டத்தில் ஆபாச திரைப்பட உலகில் இருந்து […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.42 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை

  • April 10, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார்.

வட அமெரிக்கா

நஷ்டஈடு கோரி தன்னுடன் டேட்டிங் செய்த 50 பெண்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ள அமெரிக்கர்

  • April 10, 2024
  • 0 Comments

டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் சர்வ சாதாரணமாக மாறி வருகிறது. டேட்டிங் செய்வதற்கு இணையை தேர்வு செய்ய ஆன்லைனில் ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவர்ட் லூகாஸ் முர்ரே என்பவர் தன்னுடன் டேட்டிங் சென்ற பெண்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்ததாக கூறி, தன்னை பற்றி விமர்சனம் செய்ததாக 50 பெண்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ‘ஆர் வீ டேட்டிங் தி சேம் கை’ என்ற பேஸ்புக் குழுவில் பெண்கள் டேட்டிங் செய்யும் போது சந்தித்த […]

இலங்கை

இலங்கையில் அரச பணியாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • April 10, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு அவர்களின் பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மே தினக் கூட்டத்தின் பின்னர் தேர்தலை கருத்திற் கொண்டு அரசியல் பணிகளை முடுக்கிவிட ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத் தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த கட்சி […]

இந்தியா

கிணற்றுக்குள் விழுந்த பூனை… காப்பாற்றுவதற்காக குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!

  • April 10, 2024
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த பூனையை மீட்க, ஒருவர் பின் ஒருவராக குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகருக்கு உட்பட்ட வட்கி கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் நேற்று இரவு பூனை ஒன்று விழுந்தது. அதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கிணற்றுக்குள் குதித்தனர். உள்ளே சென்ற நபர்கள் திரும்பி வராததாலும், அவர்களிடமிருந்து எவ்வித சமிக்ஞையும் […]

ஆசியா

ஹாங்காங்கில் உள்ள கட்டடத்தில் தீவிபத்து : ஐவர் உயிரிழப்பு!

  • April 10, 2024
  • 0 Comments

ஹாங்காங்கில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்திற்குள் இருந்தவர்களிடமிருந்து உதவி கேட்டு அழைப்புகள் தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், கட்டடத்தில் இருந்தவர்களை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று […]

ஐரோப்பா

போர் விவகாரம் : ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை குறித்த வழக்கை வென்ற ரஷ்ய தொழிலதிபர்கள்!

  • April 10, 2024
  • 0 Comments

ரஷ்ய தொழிலதிபர்கள் மைக்கேல் ஃப்ரிட்மேன் மற்றும் பீட்டர் அவென் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளனர். புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் நுழைய உத்தரவிட்டதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல சுற்று தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எரிசக்தித் துறை, வங்கிகள், உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனம், வணிகங்கள் மற்றும் சந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளன. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட ரஷ்ய அதிகாரிகளை சொத்து […]

பொழுதுபோக்கு

சிம்புவை வச்சு செய்யும் கமல்… போட்டு போட்டு கதறும் STR

  • April 10, 2024
  • 0 Comments

கமல் தயாரிப்பில் சிம்புவின் 48வது பட அறிவிப்பு எப்போதோ வெளிவந்துவிட்டது. பீரியட் கால படமாக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட்டுக்காக சிம்பு கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டார். கடந்த மாதம் அவரது பிறந்த நாளில் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் என்ன பிரயோஜனம். இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. சிம்புவும் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கிறார். ஆனால் ஆண்டவரோ அவருடைய படங்களில் கவனம் செலுத்துகிறாரே தவிர இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அதனால் அவர் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஐசரி […]