ஐரோப்பா செய்தி

UKவில் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இறுதி வாய்ப்பு – 40000 பவுண்ட்ஸ் வெகுமதி

பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை நாடுகடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் கீழவையில்  (காமன் சபை) அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் வெகுமதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய  தாமகவே நாட்டைவிட்டு வெளியேறுபவர்களுக்கு 40000 பவுண்ட்ஸ் வழங்க இங்கிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்கள் இந்தச் சலுகையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இந்தப் பணத்தைப் பெற மாட்டார்கள்.

மாறாக, அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிய பிறகு, ஒப்புக்கொள்ளப்பட்ட நிதி உதவியானது ஒரு ப்ரீ-பெய்டு அட்டை  pre-paid card  மூலமாக  வழங்கப்படும்.

அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யும் வரை காத்திருப்பதை விட, குடும்பங்கள் தாமாகவே வெளியேறுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி