இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது

  • April 13, 2024
  • 0 Comments

சுமார் 26 மில்லியன் பெறுமதியான கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 57 மாத்திரைகளுடன் மடகாஸ்கர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதான குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண், எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவின் மும்பை ஊடாக  நாட்டிற்குள் வந்துள்ளார். அந்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை அகற்றுவதற்காக நீர்கொழும்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைத்திருந்த […]

ஆசியா

பாகிஸ்தானில் மனைவி உள்பட 7 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

  • April 13, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் , வறுமையில் வாடும் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு  குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்றதாகக் போலீசார் தெரிவித்தனர். தொழிலாளியான சஜ்ஜத் கோகர், தனது மனைவி கவுசர், 42, மற்றும் எட்டு மாதங்கள் முதல் 10 வயது வரை உள்ள நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் ஆகிய ஏழு குழந்தைகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் நிதிப் பிரச்சினையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனைவியுடன் அடிக்கடி தகராறு […]

இலங்கை

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

  • April 13, 2024
  • 0 Comments

புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள், 500 காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் 400 இராணுவத்தினர் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை

புதிய தேனீக்களை கண்டுப்பிடித்த இலங்கை ஆய்வாளர்!

  • April 13, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20,000 வகையான தேனீக்கள் உள்ளன, அவற்றில் 10 சதவீதம் மட்டுமே தேனை உருவாக்குகின்றன. மீதமுள்ள தேனீக்கள் மோனோசியஸ் மகரந்தச் சேர்க்கை தேனீக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இலங்கையை சேர்ந்த ஆய்வாளர் திலின ஹெட்டியாராச்சி தனது ஆராய்ச்சியின் மூலம் தேன் அல்லாத மகரந்தத்தை சார்ந்துள்ள மூன்று வகையான தேனீக்களை அடையாளம் கண்டுள்ளார். கனடாவில் உள்ள மனிடோபா பல்கலைக்கழக முதுகலை உதவித்தொகை இந்த கண்டுபிடிப்புகள் வட அமெரிக்காவில் உள்ள லாசியோகுளோசம் (லேசியோக்ளோசம்) இனத்தின் தேனீ மாதிரிகளை ஆய்வு […]

உலகம்

இஸ்ரேலுடன் தொடர்புடைய போர்ச்சீகல் சரக்கு கப்பலை சிறைபிடித்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்

  • April 13, 2024
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் திகதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். […]

இந்தியா

திருமணமான 9 நாளில் காதலனுடன் சேர்ந்து விபரீத முடிவை எடுத்த புதுப்பெண்…!

  • April 13, 2024
  • 0 Comments

திருமணமான 9 நாளில் தனது காதலனுடன் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டம், கஜேந்திரகடா தாலுகா நரேகல் நகரில் இன்று வயல் வேலைக்காக கிராம மக்கள் வந்தனர். அப்போது வயல் அருகே இருந்த மரத்தில் இரண்டு பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக நரேகல் போலீஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த […]

பொழுதுபோக்கு

‘GOAT’ பட முதல் சிங்கிள் பாடல்… வெளியானது டீசர்

  • April 13, 2024
  • 0 Comments

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின், முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக டீஸர் வெளியாகி உள்ளது. தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் ‘GOAT’ திரைப்படத்தின், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. அண்மையில் தளபதி விஜய்யின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் தற்போது புதிய […]

ஆசியா

சீன உயர்மட்ட அதிகாரி வடகொரியாவிற்கு விஜயம்!

  • April 13, 2024
  • 0 Comments

சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் வட கொரியாவுடனான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென் கொரியாவையும் அதன் நட்பு நாடான அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ள நிலையில், சீன உயரதிகாரியான ஜாவோ லெஜியினின் வடகொரியாவின் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வடக்கின் பொருளாதார உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவின் மிக முக்கியமான ஆதாரமான சீனா, உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், ஆனால் அரசியல் நிலைமை […]

வட அமெரிக்கா

உலக சாதனை படைத்த வயது முதிர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் மரணம்

  • April 13, 2024
  • 0 Comments

உலகின் வயது முதிர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற உலக சாதனையுடைய இரட்டையர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோரி மற்றும் ஜோர்ஜ் ஸப்பால் என்ற இரட்டையேரே இவ்வாறு தங்களது 62ம் வயதில் காலமாகியுள்ளனர். பென்சில்வேனிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த இருவரும் 30 ஆண்டுகளே உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் எதிர்வுகூறியிருந்த நிலையில், இருவரும் 62 வயது வரையில் உயிர் வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

இலங்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

  • April 13, 2024
  • 0 Comments

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று இரவு 9.05 மணிக்கு பிறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  இன்று (13.04) பிற்பகல் 2.41 முதல் ஏப்ரல் 14 ஏப்ரல் 13 அதிகாலை 3.29 வரை சுபநேரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுபகாலங்களில் சமயச் சடங்குகளை மேற்கொள்வது உத்தமம் என்று சுப ஆசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.