பொழுதுபோக்கு

அயலான்.. நான்காம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • January 16, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று அயலான். இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர் .ஏலியனை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்பட்டம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு போராட்டத்திற்கு பின் வெளியாகி உள்ளது. […]

வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: ட்ரம்பை ஆதரிக்க முடிவு!

  • January 16, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வு போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராக்குவதற்காக பணியாற்றப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே தான் அதிபர் தேர்தலுக்கான போட்டி நிலவுகிறது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக உள்ளார்.இந்நிலையில் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி சூடுபிடித்துள்ளது. குடியரசு […]

இலங்கை

இலங்கை : காற்றின் தரம் குறித்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

  • January 16, 2024
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர்  அஜித் வீரசுந்தர தெரிவித்தார். இதன் காரணமாக சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள […]

மத்திய கிழக்கு

விரிவடைந்து செல்லும் போர்… இஸ்ரேலின் உளவு மையம் மீது ஏவுகணைத் தாக்குல் நடத்திய ஈரான்

  • January 16, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், இஸ்ரேலின் ’மொசாட்’ உளவு மையத்தின் மீது நேரடியாக ஏவுகணைத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது. இதனால் காசாவுக்குள் நிலைகொண்டிருக்கும் இருந்த போர், மத்திய கிழக்கில் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் அத்துமீறி புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சுமார்1200க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அக்.7 கோர நிகழ்வுக்கு பழிவாங்க இஸ்ரேல் சபதமிட்டது. அதன்படி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 100 நாட்களை கடந்துள்ளன. ஹமாஸ் அமைப்பினரை பூண்டோடு அழிப்பது, […]

இலங்கை

இலங்கையில் வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு – முப்படையினரும் வரவழைப்பு

  • January 16, 2024
  • 0 Comments

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை […]

பொழுதுபோக்கு

பிச்சீ.. த்தூனு… அர்ச்சனா ஜெயித்ததை ஏத்துக்கவே முடியல.. வனிதா ஆதங்கம்

  • January 16, 2024
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வி.ஜே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதை என்னால ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று நடிகை வனிதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மாயாவுக்கு மூன்றாவது இடம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்த மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது என்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் […]

பொழுதுபோக்கு

“ஒரு சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும்” அப்போ பிரியங்கா கணவனை பிரிந்தது உண்மையா?

  • January 16, 2024
  • 0 Comments

விஜே பிரியங்கா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே இருக்கிறார். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை. எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியது தான் அவருடைய பிளஸ் பாயிண்ட். எந்த நேரத்திலும் தன்னை யார் கலாய்த்தாலும் அதை கண்டு கோபப்படாமல் அதை சகஜமாக எடுத்துக்கொண்டு சிரித்தபடியே பலரையும் கலாய்த்து கொண்டிருக்கும் பிரியங்கா, விஜய் டிவியில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்துக் வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் சீசன் ஐந்து […]

இலங்கை

இலங்கையில் முதல் முறையாக ஒரு கிலோ கரட் 2000 ரூபாய்

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர். ஏனைய நாட்களில் அநுராதபுரம் பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. தம்புத்தேகம […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்கக் கொள்கலக் கப்பல் மீது தாக்குதல் – பொறுப்பேற்ற ஹௌதிக் குழு

  • January 16, 2024
  • 0 Comments

அமெரிக்கக் கொள்கலக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதற்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். நேற்று ஏடன் (Aden) வளைகுடாவில் ஏமன் அருகே கப்பலின்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவோ அதில் இருந்தோர் காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என கூறப்படுகின்றது. செங்கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்மீது பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டுவீழ்த்தியது. அதற்கு மறுநாள் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். ஈரான் ஆதரவிலான ஹெளதி கிளர்ச்சிக் குழு செங்கடலில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவருகின்றன. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்காக […]

வாழ்வியல்

அடிக்கடி Coffee குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்…? உங்களுக்கான பதிவு

  • January 16, 2024
  • 0 Comments

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானருக்கு காலை தூங்கி எழுந்தவுடன், காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை காபி குடிக்கின்றனர். தற்போது இந்த பதிவில் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். காபியில் அதிகப்படியான காஃபின் உள்ளதால், இது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், கல்லீரல் நோய் உள்ளவர்கள் […]