மொராக்கோவில் ஜெட் ஸ்கீயிங் செய்தபோது எல்லை தாண்டிய இருவர் சுட்டுக் கொலை!
மத்திய தரைக்கடல் நாடான மொராக்கோவின் சைடியாவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கடற்கரை ரிசாட்டில் இருந்து புறப்பட்டு ஜெட் ஸ்கீயிங் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வழிதவறி அண்டைநாடான அல்ஜீரிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அவர்களை நோக்கி அல்ஜீரிய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் பிலால் கிஸ்ஸி மற்றும் அப்தெலாலி மெர்சவுர் ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்மெயில் […]













