iPhone 15 வெளியீட்டு திகதி அறிவிப்பு – எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் புதிய வசதிகள்
இறுதியில் ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த iphone 15 மாடலின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்வு வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி குப்பர்டினோவில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பிதழில், ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ தங்கம் மற்றும் நீல நிறத்தில், கூடவே Wonderlust என எழுதப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் எது போன்ற தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாகக் கூறவில்லை. […]













