பதுளை பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பணியக பதுளை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் […]













