உலகின் தலைச்சிறந்த தீவுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!
பயண இணையத்தளமான Big 7 Travel வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 50 தீவுகள் கொண்ட குறித்த பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இலங்கையின் தலைச்சிறந்த உணவு, விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சிறந்த தீவாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக Big 7 Travel வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலப்பகுதியில் நலிவடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. […]













