உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி தனது ஈரானிய சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். னக்கும் மற்ற கைதிகளுக்கும் மருத்துவ சேவையில் வரம்புகள் மற்றும் ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டிய கடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் 51 வயதான மூத்த உரிமை ஆர்வலர் முகமதி, “ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக” அக்டோபர் மாதம் நோபல் பரிசு பெற்றார்  

இலங்கை

தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஆமர் வீதி

  • November 7, 2023
  • 0 Comments

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆமர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆமர் வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியின் ஊடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

ஆசியா

முதியவர்களுக்கான வீடியோ கேமை அறிமுகப்படுத்திய ஜப்பானிய மூதாட்டி!

  • November 7, 2023
  • 0 Comments

ஜப்பானை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஒருவர், வீடியோ கேமை அறிமுகப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சாதனை படைப்பதற்கும், எந்தவொரு விடயங்களை புதிதாக கற்றுக் கொள்ளவும் வயது ஒரு தடையில்லை என்றே சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானை சேர்ந்த 87 வயதுடைய மசாகோ வகாமியா என்ற பெண் ஒருவர் 43 வருடங்கள் வரை வங்கியில் பணியாற்றியுள்ளார். பின்பு, தனது 60 வயதில் இருந்து கம்ப்யூட்டர் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். மூதாட்டியான […]

இலங்கை

இலங்கையில் தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்ய நடவடிக்கை!

  • November 7, 2023
  • 0 Comments

நாளை முதல் வரும் 10 ஆம் திகதிவரை  மூன்று நாட்களுக்கு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (07.11) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

நியூயார்க் நகர தெருக்களில் வழிந்தோடிய பச்சை நிற நீரால் மக்கள் குழப்பம்

  • November 7, 2023
  • 0 Comments

நியூயார்க் நகர தெருக்களில் திடீரென பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இதுபோன்று பச்சை நிறத்தில் திரவம் தெருவில் ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சில பயனர்கள், […]

இலங்கை

நயினாதீவுக்கு விஜயம் செய்த சீன தூதுக் குழுவினர்!

  • November 7, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று (07.10) நயினாதீவுக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்விஜயத்தின்போது  சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும்,  நயினாதீவு மக்களுக்கு வழங்கி வைத்தனர். இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும் சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளன. நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் பாரம்பரிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்

வழக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் உள்ள மரபுசார் ஆயுதப் படைகள் (CFE) உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் தனது விருப்பத்தை அறிவித்த பின்னர், செவ்வாய் நள்ளிரவில் ரஷ்யா முறையாக முக்கிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இதை “வரலாறு” என்று அழைத்த ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம், இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

இலங்கை

சீரற்ற வானிலை: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆமர் வீதி சந்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நெலும்தெனிய, உடுகும்புர பகுதியில் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே வீழ்ந்துள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஒரு பாதையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு – […]

இலங்கை

இலங்கையின் பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

  • November 7, 2023
  • 0 Comments

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (07.11) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியின் 179 கிலோமீற்றர் தொலைவில் பாரிய மண் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதேவேளை, ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜா வத்தை பகுதியில் இன்று (07) பிற்பகல் பிரதான வீதியில் மண் மற்றும் பாரிய கல் ஒன்று வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக […]

இலங்கை

இலங்கையில் அப்சீலிங் சாகச விளையாட்டு ஆரம்பம்!

  • November 7, 2023
  • 0 Comments

இலங்கையில் முதன்முதலில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ கம்பனி (பிரைவேட்) லிமிடெட் ஆரம்பித்துள்ளது. அப்சீலிங் சாகச விளையாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு டிசம்பர் மாத இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரிமாத தொடக்கத்தில் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் சாகச விளையாட்டில் ஈடுபட தாமரை கோபுரத்திற்கு வருகை தருமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. […]