இலங்கை

சீரற்ற வானிலை: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆமர் வீதி சந்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நெலும்தெனிய, உடுகும்புர பகுதியில் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே வீழ்ந்துள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஒரு பாதையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெரகல மற்றும் ஹல்துமுல்லக்கு இடையில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் தண்டவாளத்தில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதால் களனி பள்ளத்தாக்கு ரயில் பாதையில் ரயில்கள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content