இலங்கையின் பிரதான வீதியில் போக்குவரத்து தடை!
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (07.11) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியின் 179 கிலோமீற்றர் தொலைவில் பாரிய மண் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜா வத்தை பகுதியில் இன்று (07) பிற்பகல் பிரதான வீதியில் மண் மற்றும் பாரிய கல் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)