இலங்கை

இலங்கையில் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளன!

  • November 27, 2023
  • 0 Comments

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 10,736 மில்லியன் ரூபா பெறுமதியான 7,951,710 டோஸ் பைசர் தடுப்பூசி காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி குறித்த தடுப்பூசி கையிருப்பு 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் பதிவு செய்யப்படாத […]

வட அமெரிக்கா

கனடாவில் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் நேற்று (27.11) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன்,  இருவர் காயமடைந்தனர் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மல்டி-சூட் குடியிருப்பில் நடந்துள்ளது. தாக்குதலுக்கானை காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.  மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில நினைவேந்தலுக்கு தடைக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு முறியடிப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

நினைவேந்தலுக்கு தடை கோரி ஊர்காவற்துறை நீதிமன்றத்திலே பொலிஸார் கடைசி நேரத்திலே தாக்கல் செய்த வழக்கை முறியடித்திருக்கிறோம் என சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்துகின்ற உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை தாக்கல் செய்த பொலிசார், நாங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைவு கோரப்போவதாகவும், தடை செய்யப்பட்ட சிவப்பு மஞ்சள் நிறங்களை நாங்கள் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள். அவர்களுடைய வாதங்களை நாங்கள் […]

இலங்கை

வெலே சுதாவுக்கு சுகவீனம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழுப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

  • November 27, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான ‘வெலேசுதா’ என அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்தகுமாரவை உடனடியாக புஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை செய்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார். அவர் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதா என பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெலேசுதா என அழைக்கப்படும் சமந்தகுமார, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினர் வசந்தி வசுந்தரா ஆகியோருக்கு […]

பொழுதுபோக்கு

இது அதுல?? பீஸ்ட் படத்தை கிண்டல் செய்ததற்கு நெல்சனிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்… காரணம் தெரியுமா?

  • November 27, 2023
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என தயாரிப்பாளர் கூறியிருந்தார்கள். சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் க்ளைமாக்ஸில் ஜெட்டில் போகும்போது மாஸ்கை கழட்டிவிட்டு வணக்கம் வைக்கும் காட்சியை வைத்து இயக்குநர் நெல்சனை கிண்டல் செய்து வந்தனர். யாருமே இல்லாத […]

இலங்கை

வடக்கு, கிழக்கில் தடைகளைத் தாண்டி நினைவேந்தலுக்கு ஏற்பாடு

  • November 27, 2023
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளது. தடைகளைத் தாண்டி இன்றையதினம் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதற்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் துப்புரவுப்பணிகள் நிறைவடைந்து நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இதனைவிடவும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு […]

பொழுதுபோக்கு

விஷால் 34: இன்று மாலை முக்கிய அறிவிப்பு

  • November 27, 2023
  • 0 Comments

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “விஷால் 34” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக […]

விளையாட்டு

சென்னை அணியில் மீண்டும் தோனி! மாற்றங்களின் பின் 10 அணிகளின் முழு விபரம்

  • November 27, 2023
  • 0 Comments

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு வீரர்கள் ஏலம் இல்லை என்பதால், இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அவர்களுடைய வெளியிடும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. வீரர்கள் பட்டியலை வெளியிட நேற்றே கடைசி நாள் என்பதால் பல அணிகள் எதிர்ப்பார்க்காத பல முடிவுகளை எடுத்துள்ளன. யாரும் எதிர்ப்பார்க்காத பல […]

செய்தி

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை பறித்த மண் சரிவு

  • November 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ரேங்கல் பகுதியில் ஒரு தம்பதியும் அவர்களின் 3 பிள்ளைகளும் வீட்டில் இருந்தபோது நிலச்சரிவு நேர்ந்தது. பெற்றோர், மூத்த பிள்ளை ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இளைய பிள்ளைகளையும் அவர்களின் அண்டை வீட்டுக்காரர் ஒருவரையும் இன்னும் காணவில்லை என்று அலாஸ்கா பொதுப் பாதுகாப்புத் துறை கூறியது. அந்தப் பிள்ளைகளில் ஒருவர் 12 வயதுடையவர் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி ரணில் விடுத்த அழைப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும். இந்த முறை போலல்லாமல், இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். பெட்ரோல் இல்லை, எதுவும் இல்லை. அடுத்த முறை ஐ.எம்.எஃப்-க்கு போனால் நிலைமைகள் தெரியும். எனது அடுத்த பயிற்சி […]