இலங்கை

நான் ஒரு துரோகியா?- முத்தையா முரளிதரன் கேள்வி

  • November 27, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற போது, ​​சில அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டார். முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ […]

உலகம்

கிரீஸ் நாட்டில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்தது விபத்து

கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான் புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் லெஸ்போஸ் தீவு அருகே கடும் புயலில் சிக்கி கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்துள்ளனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பியதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை விளையாட்டு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது!

  • November 27, 2023
  • 0 Comments

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவிடம் கடிதம் வழங்கியதாக ரொஷான் ரணசிங்க இன்று (27.11) தெரிவித்தார்.

இலங்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • November 27, 2023
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 2,000 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (27.11) $2015.09 ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் $11 அதிகமாகும். கடந்த 06 மாதங்களைக் கருத்தில் கொண்டால், இது சுமார் 60 டாலர்கள் அதிகரிப்பாகவும், ஒரு வருடத்தில் சுமார் 261 டாலர்கள் அல்லது 15% அதிகரிப்பாகவும் கருதலாம். இந்நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமாக பதிவாகியுள்ளது. இதன்படி 24 […]

வட அமெரிக்கா

ரொறன்ரோவில் இடம் பெற்ற கோர விபத்து; ஐவர் பலி!

  • November 27, 2023
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் […]

பொழுதுபோக்கு

வெள்ளித்திரையிலிருந்து சினிமாவில் நாயகியாக கால் பதித்தார் நம்ம “வெண்ணிலா”(பிரியங்கா குமார்)

  • November 27, 2023
  • 0 Comments

காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவந்த நடிகை பிரியங்கா குமார், கன்னட மொழி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பிரபல கன்னட இயக்குநர் துனியா சூரி இயக்கத்தில் பிரியங்கா நடித்துள்ள திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. அதில், பிரியங்காவின் நடிப்பு குறித்து பலர் பாராட்டி வருகின்றனர். காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் பிரியங்கா நடித்து வந்தார். வெண்ணிலாவை நாங்கள் அதிகம் விரும்புவதாகவும், ஆனால், வெள்ளித்திரையில் தங்களின் நடிப்புக்கு நீங்கள் மேலும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் […]

இலங்கை

ICC யின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சஜித் கோரிக்கை!

  • November 27, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (27.11) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே அங்குள்ள 225 எம்.பி.க்களையும் சந்திக்க முடியும் எனவும், இந்த நாட்டில் நிலவும் கிரிக்கெட் பிரச்சனை குறித்து தமக்கு தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் […]

இலங்கை

இலங்கை – இரத்தினபுரி சிறுவர் இல்லத்தில் 20 சிறுமிகள் துஷ்பிரயோகம்: கீதா குமாரசிங்க

இரத்தினபுரியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் வார்டன் ஒருவரின் கணவர், பராமரிப்பில் இருக்கும் 20 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் மேலும் நான்கு குழந்தைகளின் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தில் இருந்து மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.    

இலங்கை

இலங்கையில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 1,300 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,256 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். அவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள்  கொழும்பு மாவட்டத்தில் 256 பேர் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகிய தொழுநோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இணையாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் மூன்றாம் நாளில் இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 13 இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததன் எதிரொலியாகவே இந்த குழு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, நேற்று (26.11) ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் குழு தற்போது இஸ்ரேலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நான்கு நாள் […]