இலங்கை

யாழில் வட்டுக்கோட்டை நிகழ்வுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டம்

  • December 3, 2023
  • 0 Comments

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது. நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் […]

இந்தியா

03 மாநிலங்களில் ஆட்சியமைக்கும் பாரதீய ஜனாதா கட்சி!

  • December 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் 4 மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை உறுதிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை உறுதிப்படுத்தத் தவறியது விசித்திரமான உண்மை. தெலுங்கானா தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி […]

இலங்கை

இலங்கை வந்த போலந்து பிரஜை பரிதாபமாக உயிரிழப்பு

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல கடற்கரையில் நேற்று வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 71 வயதான போலந்து நாட்டு பிரஜை .என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்த நபர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற போது வெளிநாட்டவர் தனது மனைவியுடன் கடலில் நீராடியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேருவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

உலகம்

தன் 191-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜோனதன் ஆமை

  • December 3, 2023
  • 0 Comments

செயின்ட் ஹெலேனா தீவில் வசித்து வரும் ஜோனதன் ஆமை தனது 191வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், உலகின் மிகவும் வயதான ஆமை என்ற சாதனையை தக்க வைத்துள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அதிகபட்ச வயது வரை வாழக்கூடியவை ஆமைகள் ஆகும். இவற்றின் சராசரி வாழ்நாள் சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடல் ஆமைகள் உணவாகாமல் தப்பித்தால் இந்த 150 ஆண்டுகளை கடப்பது மிகவும் எளிதானதாகும். அதேசமயம் நிலத்தில் வாழும் […]

வட அமெரிக்கா

கனடிய மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காச்சல் தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

  • December 3, 2023
  • 0 Comments

கனடாவில் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை கூடுதலாக பதிவாகி வருவதாக ரொறன்ரோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய்த் தொற்று பரவுகையை தடுக்கவும், நோய்த் தொற்றிலிருந் பாதுகாத்துக் கொள்ளவும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாகாணத்திற்கு மாகாணம் சளிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கை மாறுபட்ட அளவில் காணப்படுவதாக கனடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எவ்வாறெனினும் கூடிய விரைவில் தடுப்பூசி […]

இலங்கை

திருகோணமலையில் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

  • December 3, 2023
  • 0 Comments

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த கே.கவிதா ( 47) என தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உறவினர் ஒருவருக்கு 20 பவுண் நகை வழங்கியது தொடர்பில் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இருவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். குறித்த இருவரும் சனிக்கிழமை (02.12.2023) இரவு 11.00 மணியளவில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் மீளவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • December 3, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் இன்று (03.12) மீளவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலைியல் இன்றைய தினம் மீளவும் 6.6 ரிக்டர் தஅளவில் நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

காதலர் விஜய் வர்மாவுக்காக தமன்னா செய்த அர்ப்பணிப்பு

  • December 3, 2023
  • 0 Comments

இந்தியாவில் தயாராகி ‘நெட்ஃபிளிக்ஸில் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்த இந்தி ஆந்தாலஜி படம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ். கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இந்தியப் பார்வையாளர்களை வைரஸாகத் தொற்றியது இந்தப் படம். ஓடிடியில் இன்றைக்கும் இந்தப் படம் பிரபலமாக இருக்கிறது. இதுவரை உலக அளவில் இந்த ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ படத்தை 8 கோடி பேர் பார்த்திருக்கிறார் என்கிறது நெட்ஃபிளிக்ஸ். அனுராக் காஷ்யப் இயக்கிய படம் இது. இத்தனை ஹிட் அடித்த ஒரு ஆந்தாலஜியை மீண்டும் பிராண்ட் செய்து பணம் பார்க்க விரும்பிய […]

இலங்கை

பயங்கரவாத தாக்குதல் : பாரிஸ் தாக்குதல் குறித்து மக்ரோன் விமர்சனம்!

  • December 3, 2023
  • 0 Comments

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். குறித்த தாக்குதலில் ஜெர்மன் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தில் பொலிஸார் சரியான சமையத்தில் வரவில்லை என்றால் மேலும் பலர் உயிரிழந்திருப்பார்கள் எனக் கூறியதாகவும், பாலஸ்தீனர்களின் நிலை கண்டு தான் கவலையடைவதாக தெரிவித்தாகவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இது குறித்து […]

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை கண்டித்த போப் பிரான்சிஸ்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முறியடிக்கப்பட்டதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் “கூடிய விரைவில்” புதிய போர்நிறுத்தத்தை எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை பரிமாறிக் கொள்ள அனுமதித்த இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் ஏழு நாள் இடைநிறுத்தம் வெள்ளிக்கிழமை சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் தனது குண்டுவீச்சு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 15,400க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பாலஸ்தீனிய […]

error: Content is protected !!