அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பதினாலு இலட்சத்து ஆறாயிரத்து […]













