செய்தி விளையாட்டு

200 போட்டிகள்; புதிய மைல்கல்லை எட்டும் ஜோ ரூட்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (13) ஆரம்பமாகவுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (13) ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டி பேர்த்தில் உள்ள ஒப்டஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது சாண்ட்பேப்பர் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அதிக கவனச்சிதறல்கள் இன்றி தொடருக்குத் தயாராகி வருகிறது.

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து, நான்கு போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வேகமும் பவுன்ஸும் நிறைந்த ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்தி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

எதிர்வரும் 2027 உலகக் கிண்ணத் தொடரைக் கருத்திற்கொண்டு வெவ்வேறு ஆடுகளச் சூழல்களுக்கு ஏற்ப விளையாடும் திறனை வளர்த்துக்கொள்வதே தற்போதைய சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம் என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்களான சோனி பேக்கர் மற்றும் ஹென்றி குரோக்கோம் ஆகியோருக்கு சிறப்பாகச் செயற்பட வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், முதலாவது ஒருநாள் போட்டி ஜோ ரூட்டுக்கு விசேடமானதாக அமையவுள்ளது. அவர் தனது 200ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

இதன் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார்.

இதுவரை 8,010 ஓட்டங்களைக் குவித்துள்ள ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராகத் திகழ்கிறார். அவரது துடுப்பாட்ட சராசரி 50.37 ஆகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி