இலங்கை

மின்சாரத் தடை தொடர்பில் இருவேறு விசாரணைகள்: இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகிய இரண்டும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்மைப்பில் மின்னல் தாக்கியதன் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்