உலகம்

சவூதி அரேபியாவில் வீட்டு பணிப் பெண் ஒருவருக்கு 100 கசையடிகள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் 40 வயதான எஸ்தர் வான்ஜா முத்தோனி என்ற பெண்ணுக்கு 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் எகிப்திய ஆணுடன் திருமணத்தை மீறிய உறவை பேணி அதன் மூலம் கர்ப்பம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது சட்டவிரோதமாகும்.

இந்த விதி, புலம்பெயர்ந்த பெண்களை, குறிப்பாக கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்களை, விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கிறது என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

முத்தோனியின் வழக்கு தற்போது நிலுவையில் உள்ள காரணத்தினால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தனது ஒரு வயது மகனுடன் அங்கு பொலிஸ் காவலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்