மார்க் ஆண்டனி படத்துல சும்மா மிரட்டியிருக்காங்க அபிநயா
காது கேட்கவில்லை என்றாலும் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது நடிப்புத் திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பை பற்றி பேச வைத்து வருபவர் நடிகை அபிநயா. சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மருக்கு மனைவியாக நடித்திருப்பார். வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அபிநயா விஷால் நடிப்பில் இன்று வெளியான மார்ட் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்து அசத்தியுள்ளார். […]













