ஆசியா பொழுதுபோக்கு

மார்க் ஆண்டனி படத்துல சும்மா மிரட்டியிருக்காங்க அபிநயா

காது கேட்கவில்லை என்றாலும் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது நடிப்புத் திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பை பற்றி பேச வைத்து வருபவர் நடிகை அபிநயா.

சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மருக்கு மனைவியாக நடித்திருப்பார். வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அபிநயா விஷால் நடிப்பில் இன்று வெளியான மார்ட் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அபிநயா, மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது அடுக்கியுள்ளார்.

விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யாவுடன் நடித்து அனுப்பவும் மிகவும் அருமையாக இருந்தது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மார்ட் ஆண்டனி மையக் கருவே அபிநயாவின் அம்மா கதாபாத்திரம் தான் என்பதால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் நடிப்பு சூப்பர், தொடர்ந்து தமிழ் படங்களில் நடியுங்கள் என பாராட்டி வருகின்றனர்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோயின் வித்து வர்மாவை விட அபிநயாவுக்கு தான் ஸ்டாப் அதிகம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார் அபிநயா.

MP

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்