கிருஷ்’ ஒப்பந்தம் – 04ஆவது குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்
சர்ச்சைக்குரிய ‘கிருஷ்’ ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான ‘கிருஷ்’ சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், முந்தைய நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் இலஞ்ச ஆணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




