வாழ்வியல்

எப்போதும் முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்

முட்டையின் வெள்ளைக் கரு: புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.

தேன்: முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். மேலும், முகப்பருக்கள் வராது தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெயை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

How

கற்றாழை சருமத்தை குளிரூட்டும். சருமத் துளைகளை குறைப்பதால் எண்ணெய் சுரப்பது குறையும். கற்றாழை கூழ் எடுத்து சிறிது நேரம் குளிரவைத்து பிறகு முகத்தில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

எலுமிச்சை: வைட்டமின் சி கொண்ட எலுமிச்சையில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதனால் முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீருடன் கலந்து, பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவி விடவும்.

தக்காளி இறந்த சரும அணுக்களை அகற்றி மிகுதியான எண்ணெயை இழுத்துக் கொள்கிறது. இரண்டாக வெட்டிய தக்காளியை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

ஓட்ஸ் அதிகப்படியான எண்ணெயை உரிந்து, முகத்தை சுத்தப்படுத்தி, ஈரப்பதத்துடன் வைக்கும். ஓட்ஸை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content