வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

vegetable and meat

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான இதயத்துடிப்பு மயக்கம் நெஞ்சுவலி ஆகியவை அவர்களுக்கு ஏற்படலாம்.

இதன்காரணமாக ஹீமோகுளோபின்  தேவையான அளவு இருக்க வேண்டும். பொதுவாக  வளர்ந்த ஆண் மகன் ஒருவருக்கு 14-15g/dl என்ற அளவிலும், பெண்களுக்கு  12-16 g/dl  இருக்க வேண்டும்.

 ஹீமோகுளோபின் அதிகம் உள்ள உணவுகள் 

இறைச்சி மற்றும் மீன்

இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. தினசரி நாம் உண்ணும் உணவில் மீன் மற்றும் இறைச்சியா ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை நம் பெற முடியும்.

ப்ரோக்கோலி : ஒரு கப் ப்ரோக்கோலி கிட்டத்தட்ட ஒரு நபருக்கு தேவையான அளவில் ஆறு சதவீதம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே நமது தினசரி உணவில் பிரக்கோலி சேர்த்துக் கொள்வதின் மூலம் நமக்கு தேவையான இரும்புச்சத்தை நாம் பெற முடியும்.

கீரை : ஒரு கப் கீரையில் கிட்டத்தட்ட 3.72அப அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர கீரை வகைகளில் பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் தாதுக்களும் நிறைந்துள்ளன. எனவே தினசரி உணவில் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

மாதுளம்பழம் : இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாதுளம் பழத்தின் விதைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளும் அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயா : சோயாவில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது. ஒரு கப் சோயா பீனை நாம் எடுத்துக் கொண்டால் அதில் 9.9 அப அளவிலான இரும்புச்சத்து நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
செய்தி வாழ்வியல்

அதிகம் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு முக்கிய தகவல்

உடல் நலக்குறைவினால்  பாதிக்கப்படும் போது அவற்றிலிருந்து மீண்டு வர மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்துவோம். அவ்வாறு மாத்திரைகளை பயன்படுத்தும் போது நாம் என்னென்ன விடயங்களை

You cannot copy content of this page

Skip to content